நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கும் கேசுபாய் பட்டேல்
அகமதாபாத்: கர்நாடக பாரதிய ஜனதாவின் பிரச்சனை என்னவாகுமோ எனத் தெரியாத நிலையில் குஜராத் பாரதிய ஜனதாவிலும் குடைச்சல் ஆரம்பித்துவிட்டது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பவர் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் பட்டேல். குஜராத்தில் 18 விழுக்காடு உள்ள பட்டேல் சமூகத்தைச் சேர்ந்தவர். 1995, 1998 ஆண்டுகளில் குஜராத் மாநில முதல்வராக இருந்தவர். 2001-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த 2 முக்கிய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்விய அடைந்த பிறகு கேசுபாய் பட்டேலுக்கு இறங்குமுகமானது. அப்போதுதான் நரேந்திர மோடியும் உருவானார்.
கடந்த 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலலில் மோடிக்கு எதிராக பகிரங்கமாகவே வாக்களிக்கச் சொன்னவர் கேசுபாய் பட்டேல். தாம்கூட வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டவர்.
தற்போது மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார். இதற்குக் காரணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல். தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் கேசுபாய் பட்டேல் போகுமிடமெல்லாம் நரேந்திர மோடியை ஒரு பிடி பிடிக்காமல் விடுவதில்லை. குஜராத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றும் சாடி வருகிறார். இதேபோல் குஜராத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் பகிரங்கமாக கூறி வருகின்றார்.
கேசுபாய் பட்டேலுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பவர் ஜதாபியா. இவர் பாஜகவில் இருந்து விலகி மகாகுஜராத் ஜனதா கட்சியை தொடங்கியவர். இவரும் கேசுபாய் பட்டேலுடன் சேர்ந்து கொண்டு நரேந்திர மோடிக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.
பழைய எதிரிகள் கரம் கோர்த்து எழுந்து நிற்பது நரேந்திர மோடிக்கு நல்லதா? கெட்டதா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்....
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications