கட்சிக்காக ஓடாய் தேய்ந்த கருணாநிதியின் 89வது பிறந்தநாளை நாடெங்கும் கொண்டாட அன்பழகன் கோரிக்கை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை நாடு தழுவிய அளவில் கொண்டாடுமாறு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்த நாள் ஜுன் மாதம் 3ம் தேதி என்பதால் தமிழகம் பெருமகிழ்ச்சி அடைகிறது. அவரது பதினான்காவது வயதில், இந்தி எதிர்ப்புக் குரல் எழுப்புவதில் அவரது பொதுவாழ்வு தொடங்கியது. திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு, அதற்கான தொண்டு ஆற்றியதால், பல நேரங்களில் உயிர் நம்முடையது அல்ல' என்று தீர்மானித்துக் கொண்டு உலவும் நிலை.
இயக்கப் பணிக்காக இரவும், பகலும் காரில் பயணம். அதனால் சந்திக்க நேரிட்ட விபத்துக்கள் பல. குற்றுயிரும் குலைஉயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விளைந்த வேதனை. கண் பார்வையே மீண்டும் கிடைக்குமா என்னும் கவலைக்காளான நிலையில் மாதக்கணக்கில் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சை. அமெரிக்கா சென்று கண் சிகிச்சை பெற்றுவரும் நிலைக்கும் ஆளானவர்.
கருணாநிதியின் அடுக்கிவரும் துடிப்புமிக்க வசனம் தொடக்க நாட்களில் நடிகர் சிவாஜியைப் புகழ் ஏணியின் உச்சிக்கே உயர்த்தியது. இளமையில் அவரது எழுத்தில் கனல் தெரித்தது எனில் முதுமையிலும் அவரது எழுத்து கனிச்சாறாக இனிக்கிறது. கருணாநிதியின் இலக்கியப் படைப்பு அண்ணாவின் பாராட்டை பெற்றது. கருணாநிதியின் கொள்கைப் பற்று பெரியாரின் பாராட்டைப் பெற்றது.
கருணாநிதியின் வாக்குறுதி காக்கும் நேர்மை இந்திராகாந்தியால் பாராட்டப்பட்டது. கருணாநிதியின் நாணயம் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டது. பெரியாரும், அண்ணாவும் இல்லாத நிலையில், திராவிட இனத்தைக் காக்கவல்ல தலைமையின்றி அனாதையாக விடலாமோ? நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமு கழகம் தோற்றுவிட்டதே என்போர் உணர வேண்டிய உண்மை, தேர்தல் என்பது திராவிட இயக்கத்தின் பல கடமைகளில் ஒன்று. அதில் தோல்வியுற்றதால் திராவிட இயக்கம் ஓய்ந்துவிடாது. ஓய்ந்துவிடக் கூடாது.
ஓய விடமாட்டோம், லட்சியம் காப்போம்' என்னும் உறுதி கொண்டோராக நாம் கலைஞர்' தலைமையில் அணிவகுத்தாக வேண்டும். தந்தை பெரியார் சொல்லி வந்தது போன்று, இனத்தைக் காத்திடும் லட்சியத்தை நிறைவேற்ற, தேர்தல் ஒன்றே தகுந்த வழியல்ல. எனவே, தேர்தல் தோல்வி நமக்குப் பெரிதல்ல. தலைவர் கலைஞரின் 89வது பிறந்தநாளை நாம் நாடெங்கும் கொண்டாடுவோம் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.
-
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications