டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 குழந்தைகள் பலி: பலி எண்ணிக்கை 19க உயர்வு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 குழந்தைகள் பலியாகினர். இதையடுத்து டெங்கு காய்ச்சலால் பலியானார் எண்ணிக்கை 19க உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மீனாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது இரண்டு வயது குழந்தை விஷ்ணு கடந்த மாதம் 19ம் தேதி முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தது. நேற்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதே போன்று வீரவநல்லூர் வெள்ளக்குழி செளராஷ்டிரா காலனியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் ஜெகன் என்ற சிறுவனும டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் நேற்று காலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான்.
நேற்று அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இறந்ததை அடுத்து டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19க உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் சிலருக்கு காய்ச்சலின் தன்மை தீவிரமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் மாநகரைச் சேர்ந்த சிலர் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுவரை நெல்லை மாவட்டத்தில் பரவிய டெங்கு காய்ச்சல் தற்போது தூத்துக்குடி மாவட்ட மக்களையும் தாக்கி வருகிறது. இதையடுத்து அந்த மாவட்ட சுகாதார துறையினரும் உஷார்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி நெல்லை அரசு மருத்துவமனையில் மட்டும் 141 பேர் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications