புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் : விஜயகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vijayakanth
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் எம்.எல்.ஏ. சாலை விபத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டன.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக செயலாளரக ஜாகீர் உசேன் உள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தத் தேர்தலில் திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிடாததால், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுகவின் கார்த்திக் தொண்டமான் மற்றும் தேமுதிகவின் ஜாகீர் உசேன் இடையேதான் போட்டி உள்ளது.

தேமுதிக சார்பில் போட்டியிட ஜாகீர் உசேன் மற்றும் திருப்பதி, கருப்பையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஜாகீர் உசேன் வசதி படைத்தவராகவும், செலவு செய்ய தயாராகவும் இருப்பதால், அவருக்கே வாய்ப்பைத் தந்துள்ளார் விஜய்காந்த்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK named Zakir Hussain as its candidate for pudukottai By poll. Polling will take place on June 12 and the counting of votes on June 15.
Please Wait while comments are loading...