For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மீதான நிலக்கரி சுரங்க ஊழல் புகார்: விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவு?

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மீதான ரூ1. லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐக்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ ஆராய ஆரம்பித்துள்ளது.

2008-2009ம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றது என்பது தணிக்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார். இந்தப் புகாரை கையில் எடுத்துக் கொண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவினர் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தனர்.

தம் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்றும்கூட மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந் நிலையில் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சி.பி.ஐக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்தது.

இதையடுத்து நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக எப்படி விசாரணை நடத்துவது என்பது குறித்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இந்த ஊழல் தொடர்பான புகாரில் கூறப்பட்ட விவரங்களை சிபிஐ ஆராய ஆரம்பித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புகாரில் உண்மையிருப்பதாக சிபிஐ கருதினால் முழு அளவிலான விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

English summary
A day after the Centre virtually ruled out any probe into the allotment of coal blocks, it transpired the CBI is already looking into the allegations of wrong-doing in the matter. "A reference has been received from the Central Vigilance Commission (CVC) with regard to complaints on allotment of coal blocks by the ministry of coal between 2006 and 2009. We are verifying the contents of the complaints. We will proceed further only after the verification," said a senior CBI official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X