For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடித்த 5 சிங்கள மீனவர்கள் கைது

By Mathi
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தமிழக கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக சிங்கள மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூரை அடுத்த மணப்பாடில் இருந்து 45 கடல் மைல் தொலைவில் சனிக்கிழமை பிற்பகல் தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இலங்கையைச் சேர்ந்த விசைப்படகில் 5 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் அந்த 5 பேரையும் பிடித்து கரைக்குக் கொண்டு வந்தனர். விசாரணையில், 5 பேரும் இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

காற்று பலமாக வீசியதால் வழிதவறி வந்துவிட்டதாக அவர்கள் கூறினாலும் அதிகளவு மீன்களை பிடித்துச் செல்லும் நோக்கிலேயே துணிச்சலாக தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கும் போலீஸார் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

English summary
Five Sri Lankan nationals were held by the Indian Coast Guard after they were found straying in the Indian waters near Tuticorin on Saturday. The crew of Indian Coast Guard vessel, Veera found a fishing boat drifting 45 knots south east off Tuticorin coast with a Sri Lankan flag. They found five Sri Lankan fishermen in the boat and secured them. They were later handed over to the Thermal Nagar police station in Tuticorin on Sunday afternoon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X