For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூன் 24-ம் தேதி பிரணாப் ராஜினாமா; 25-ம் தேதி வேட்புமனு தாக்கல்!

By Shankar
Google Oneindia Tamil News

Pranb mukherjee
ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வரும் ஜூன் 24-ம்தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார். 25-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்கள் எந்த பதவியிலும் இருக்கக் கூடாது என்பது அரசியல் சாசன விதிகளுள் ஒன்று.

பிரணாப் முகர்ஜி தற்போது பல்வேறு பொறுப்புக்களில் உள்ளார். நிதி அமைச்சர் பதவி, பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவி உள்பட 60-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற குழுக்களுக்கு தலைவராக உள்ளார்.

வருகிற 24-ந்தேதி நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பிரணாப் முகர்ஜி தீர்மானித்துள்ளார். மற்ற பொறுப்புகளில் இருந்தும் அவர் அன்றே விலகுவார் என்று தெரிகிறது.

மறுநாள் (25-ந்தேதி) பிரணாப் முகர்ஜி வேட்பு மனுதாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்ததும், நிதி இலாகாவை சிறிது காலம் தற்காலிகமாக தன் பொறுப்பில் வைத்திருப்பார்.

பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும். அப்போது புதிய மத்திய நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார். அநேகமாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்பார் என்று தெரிகிறது.

இல்லையெனில் மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா பிரதமரின் பொருளாளதார ஆலோசகர் சி. ரங்கராஜன் ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்தப் பதவி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

English summary
UPA's Presidential candidate Pranabh Mukherjee will be resigned his posts on June 24th and files his nomination papers on June 25th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X