For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏன் தயக்கம்: அப்துல் கலாம்

By Mathi
Google Oneindia Tamil News

Abdul Kalam
டெல்லி: தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பது என்பது குடியரசுத் தலைவருக்கு மகிழ்ச்சியான பணி அல்ல என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

"திருப்புமுனைகள்" என்ற தலைப்பில் அப்துல்கலாம் எழுதியுள்ள புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

குற்றத்தின் தன்மை, குற்றத்தின் கடுமை, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சமூக, பொருளாதார நிலைமை போன்றவற்றை ஒரு சாதாரண குடிமகனின் நிலையில் இருந்து பரிசீலிக்க வேண்டும் என நான் நினைத்தேன். நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளும் சமூக, பொருளாதார பாரபட்சத்தை கொண்டிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது, குறைந்த அளவே விரோதம் கொண்டிருந்து, குற்றத்தை செய்வதில் நேரடி நோக்கம் கொண்டிராதவர்களையும் நாம் தண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப்படுகிற தூக்குத் தண்டனை அனைத்து மேல்முறையீடுகளிலும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதை குடியரசுத் தலைவர் உறுதி செய்வது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பல ஆண்டுகளாக இப்படி ஏராளமான வழக்குகள் (நிலுவையில் இருக்கின்றன. இது, எந்தவொரு குடியரசுத் தலைவரும் மகிழ்ச்சியுடன் முடிவு எடுக்கக்கூடிய பணி அல்ல. இது மரபு வழியாக வந்த ஒன்று.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தனஞ்சய் சட்டர்ஜிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தேன். நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். இந்த நிலையில், செயற்கையாக அல்லது உருவாக்கப்பட்ட ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்தவொரு மனித அமைப்போ அல்லது மனிதரோ தகுதியானவர்கள் என்று என்னால் உறுதியாக கருத இயலவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Pendency of several cases related to capital punishment in Rashtrapati Bhavan is one "inherited task" that no President would feel happy about, according to former President APJ Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X