For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் மாநிலத்தில் பாஜக பிளவுபடுகிறது - தனிக் கட்சித் தொடங்க முன்னாள் முதல்வர் கேசுபாய் முடிவு

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக புதியதாக ஒரு கட்சி களம் இறங்கப் போகிறது. குஜராத் பாஜகவில் இருந்து கொண்டு முதல்வர் மோடிக்கு குடைச்சல் கொடுத்து வரும் கேசுபாய் பட்டேல்தான் புதியதாக கட்சி தொடங்கப் போகிறார்.

குஜராத் முன்னாள் முதல்வரான கேசுபாய் பட்டேல் இந்த மாத இறுதியில் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரும் தற்போது கேசுபாய் முகாமில் இருப்பவருமான கோர்தான் ஜதாபியா கூறுகயில், கேசுபாய் பட்டேல் புதிய கட்சி தொடங்குவது 100 சதவீதம் உறுதி. குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் கேசுபாய் பட்டேலின் கட்சி போட்டியிடும். நிச்சயமாக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படுவது உறுதி என்றார்.

குஜராத் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகாலத்தில் குஜராத்தில் தேசியக் கட்சிகளே செல்வாக்கு செலுத்தி வருகின்றன. மாநில கட்சிகள் இதுவரை போணியானது இல்லை என்பதுதான் மாநிலத்தின் வரலாறு.

மொராஜி தேசாய் சன்ஸ்தா காங்கிரஸை தொடங்கி கொஞ்சம் போணியானது. ஆனால் நீண்ட்காலம் அது நிலைக்கவில்லை. 1980களில் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிமன்பாய் பட்டேல் 1980களில் ஜனதா மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கிப் பார்த்தார். அது போணியாகாத நிலையில் மீண்டும் காங்கிரசில் ஐக்கியமானார்.

இதேபோல் மற்றொரு முன்னாள் முதல்வரான பாஜகவின் சங்கர்சிங் வகேலாவும் ராஷ்டிரிய ஜனதா கட்சியை 1986-ல் தொடங்கினார். அவரது கட்சி 4 இடங்களை வென்றது. பின்னர் அவரும் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார்.

இந்த வகையில் கேசுபாய் பட்டேலின் கட்சியும் போணியாகாது என்று கூறப்பட்டாலும் இதை கேசுபாய் ஆதரவாளர்கள் நிராகரிக்கின்றனர். மொராஜி தேசாய் சன்ஸ்தா காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது குஜராத் மாநிலத்தில் அந்தக் கட்சிதான் 2-வது பெரிய கட்சியாக இருந்தது. பாரதிய ஜனதா கட்சியை அதன் பின்னர்தான் மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

குஜராத்தில் கேசுபாய் பட்டேல் கட்சி போணியாகுமோ இல்லையோ நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்கவே வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

English summary
Gujarat is likely to witness a triangular fight in this year's Assembly polls, as dissident BJP leaders, opposed to Chief Minister Narendra Modi and led by former Chief Minister Keshubhai Patel, are set to float their own party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X