For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்துக்கு புது கட்டிடம் கட்டுவதற்கான ஆலோசனைக் குழுவுக்கு சபாநாயகர் ஒப்புதல்

By Mathi
Google Oneindia Tamil News

Parliment
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க சபாநாயர் மீரா குமார் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை செயலாளர் டி.கே. விஸ்வநாதன் கூறியுள்ளதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக பரிந்துரை வழங்கவும் எந்த இடத்தில் எந்த வடிவில் புதிய கட்டிடம் கட்டுவது என்பது தொடர்பாகவும் பரிந்துரைகளை வழங்குவதற்காக் குழு அமைக்க சபாநாயகர் அனுமதி கொடுத்துள்ளார்.

85 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய கலாசார அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தற்போதைய கட்டிடடத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான பரிந்துரை வழங்கும் குழுவில் யார் யார் இடம்பெறுவர் என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 1921-ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. ரூ83 லட்சம் செலவில் கட்டப்பட்ட இது 1927ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

English summary
Parliament may have a new building in place of the existing 85-year-old heritage structure with Lok Sabha Speaker Meira Kumar giving approval for setting up a high-powered committee to suggest an alternative complex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X