For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்களில் இனி பாட்டு கேட்டுக் கொண்டே பயணம் செய்யலாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Train
டெல்லி: ரயில் பயணம் என்பது ஒரு சிலருக்கு போரடிக்கும். சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடியது. இந்திய ரயில்கள் பெரும்பாலும் குறித்த நேரத்தில் கிளம்புவதில்லை அப்படியே கிளம்பினாலும் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேருவதில்லை இதனாலேயே ரயில் பயணம் என்பது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.

ஆனால் இனி அது மாதிரி சிரமப்படத்தேவையில்லை. இனிமையான பயணத்தை ரயில் பயணிகள் மேற்கொள்ளலாமாம். பயணிகளை உற்சாகப்படுத்த ரயில்களில் இசையுடன் பாடலை ஒளிபரப்ப ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அகில இந்திய ரேடியோவின் இசை லைப்ரரியில் இருந்து பாடல்களை எடுத்து ரயில்களில் இசைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.

முதல் கட்டமாக ராஜ்தானி, சதாப்தி டோரன்டோ போன்ற விரைவு ரயில்களில் பிஸ்மில்லா கான், டிஎன் ராஜரத்தினம் போன்ற இசை மேதைகளின் இசைகளை இசைக்க வைக்கும் பணி நடந்து வருகிறது. இனி ரயில்களில் மிகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் இசையும், பாடலும் ஒலிபரப்பாகும். அதனை கேட்டுக்கொண்டே போரடிக்காமல் பயணம் செய்யலாம்.

ரயிலில் எலி, கரப்பான் பூச்சி தொல்லையை முதல்ல கட்டுப்படுத்துங்கப்பா, பாட்டு அப்புறம் போடுங்க என்று பயணிகள் கூறுவது ரயில்வே நிர்வாகத்தில் காதுகளில் விழுந்தால் சரி.

English summary
The Indian Railway is planning to music and songs telecasting in trains for passanger convenient
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X