For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கறுப்புப் பணத்தை மீட்டு, ஊழலை ஒழி்த்தால் ராகுல் தான் நிரந்தர பிரதமர்: பாபா ராம்தேவ் ஆருடம்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூரர்: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணககான கறுப்புப் பணத்தை மீட்டால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நிரந்தர பிரதமர் ஆகலாம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு, ஊழலை முற்றிலுமாக ஒழி்ததால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை மக்கள் நிரந்தரப் பிரதமராக ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இனி காங்கிரஸ் கட்சி தொடர்பான முடிவுகளை ராகுல் எடுப்பார் என்னும் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் ராகுல் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

கட்சியில் இளைஞர்களை சேர்ப்பதில் தப்பில்லை. கறுப்புப் பணத்தை எதிர்த்து நான் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கிறேன். கறுப்புப் பணத்தை மீட்கவில்லை என்றால் மக்கள் இனிமேல் காங்கிரஸை நம்ப மாட்டார்கள்.

கறுப்புப் பணத்தை அவர்கள் மீட்கவில்லை என்றால் அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிலும் குறிப்பாக காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வோம் என்றார்.

English summary
Yoga guru Baba Ramdev told that people will accept congress general secretary Rahul Gandhi as the permanent PM if he brings back black money from overseas and eliminates corruption.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X