For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யானைகளை பராமரிக்க கோயி்ல்களில் உண்டியல்: அறநிலைய துறை ஏற்பாடு

Google Oneindia Tamil News

நெல்லை: அறிநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் யானைகள் பராமரிப்புக்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

அறநிலையத்துறையி்ன் நிர்வாகத்தில் உள்ள முக்கிய பெரிய கோயில்களில் யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு ஆண்டுதோறும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் முதுமலையில் உள்ள தெப்பகாட்டில் 45 நாட்கள் புத்துணர்வு முகாம் நடக்கும். இந்த முகாமில் யானைகளுக்கு மூலிகை உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் யானைகள் உள்ள கோயில்களில் மட்டும் யானைகள் பராமரிப்புக்கு என்று தனி உண்டியலை அறநிலையத்துறை வைத்துள்ளது. ஏற்கனவே பொது உண்டியல், அன்னதான உண்டியல் மற்றும் சில கோயில்களில் பசுக்களை பராமரிக்க கோசாலை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே யானைகள் பராமரிப்புக்கும், யானைகளுக்கும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் கண்காணிப்பார்கள்.

யானைகளுக்காக வைக்கப்பட்டுள்ள சிறப்பு உண்டியல் மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்பட்டு அந்த பணம் முழுவதும் யானைகள் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மண்டலத்தில் நெல்லையப்பர் கோவில், சங்கரன்கோவில், திருக்குறுங்குடி நம்பிகோவில், இலஞ்சி குமாரகோவில், அரவிந்தலோசனார் கோவில், இரட்டை திருப்பதி, ஆழ்வார்திருநகரி தானுமலைசாமி கோவில், சுசீந்திரம் ஆகிய கோயில்களில் யானைகளுக்கு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு யானைகள் நி்ற்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

English summary
Hindu religious and charitable endowments department has kept a hundi in temples for elephants. That collection will be used to nurture temple elephants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X