நாட்டின் புதிய பொருளாதார ஆலோசகராக பேராசிரியர் ரகுராம் ஜி ராஜன் நியமனம்
Subscribe to Oneindia Tamil

நாட்டின் நிதி அமைச்சகத்தின் தற்போதைய தலைமை பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசுவின் பதவிக் காலம் ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய ஆலோசகராக ரகுராம் ஜி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐ.எம்.எப். அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுநராகவும் பணியாற்றியதுடன் சிகாகோ பல்கலைக் கழக பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
நிதி அமைச்சகத்துக்கு மட்டுமின்றி பிரதமர் மன்மோகன்சிங்கின் கவுர பொருளாதார ஆலோசகராகவும் ரகுராம் ஜி ராஜன் செயல்படுவார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் சூழலில் பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் என்று கெளசிக் பாசு வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் ரகுராம் ஜி ராஜன் எத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடம் உள்ளது.












Click it and Unblock the Notifications