For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமறைவாக இருந்த மதுரை கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி போலீசில் சரண்

By Mathi
Google Oneindia Tamil News

P.R.Palanisamy
மதுரை: தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி புகாரில் சிக்கிய மலைவிழுங்கி பி.ஆர்.பழனிச்சாமி மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்திருக்கிறார்.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் அரசு கொடுத்த அனுமதியை மீறி சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்தது தொடர்பாக கடந்த இரண்டுவார காலத்துக்கும் மேலாக அப்பகுதிகளில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 18 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டன. மேலும் சட்டவிரோத கிரானைட் குவாரிகளை நடத்திய பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோரின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இநிந்லையில் பழனிச்சாமி மற்றும் துரை தயாநிதி ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் பி.ஆர். பழனிச்சாமி மீதான வழக்குக்கு தொடர்புடைய வழக்கறிஞர் வேறு நீதிமன்றத்தில் இருந்ததால் விசாரணை வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி போலீசில் சரணடைய முடிவெடுத்தார். சென்னையில் இருந்த அவர் தமது வழக்கறிஞர்களுடன் இன்று மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு நேரில் சென்று சரண்டைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டிருக்கும் பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கக் கூடும்.

English summary
Madurai Granite barom P.R.Palanisamy has surrenderd in Madurai S.P. office today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X