For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூரிலிருந்து தப்பியோடிய மூவரை கடல்வழியே இலங்கைக்கு அனுப்பி வைத்தேன்: வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
புதுக்கோட்டை: வேலூர் சிறையிலிருந்து அகழி வழியாகத் தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள் மூவரை புதுக்கோட்டையிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு தாமே அனுப்பி வைத்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழ் இளைஞர்கள் 43 பேர் கடந்த, 1995 ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று அகழி வெட்டி அதன் மூலம் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் "தி கிரேட் எஸ்கேப்" என பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய நபர்களில் 21 பேரை அடுத்தச் சில நாட்களில் போலீசார் கைது செய்தனர். ஆனால், மற்றவர்கள் சிக்கவில்லை.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, வேலூர் சிறையிலிருந்து தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள் 45 பேரில் மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைத்ததே தாம்தான் என்று கூறியுள்ளார்.

வைகோவின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
MDMK leader Vaiko said he helped 3 prisoners who were escaped from Vellore Jail to reach Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X