For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊடகங்கள் மீதான அடக்குமுறையை அமெரிக்க நிறுத்தவேண்டும்: அசாஞ்ச் எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Julian assange
லண்டன்: ஊடகங்களின் மீது தாக்குதல் நடத்தி அதை அழிக்க நினைக்கும் போக்கை அமெரிக்க அதிபர் ஒபாமா உடனடியாக கைவிட வேண்டும் என்று விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். அவர் மீது சுவீடனில் 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 19ம் தேதியன்று அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

இந்த நிலையில் ஞாயிறன்று தூதரகத்தின் பால்கனியில் இருந்தபடி வெளியில் நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விக்கிலீக்ஸ் ஆனாலும் சரி, நியூயார்க் டைம்ஸ் ஆனாலும் சரி. உண்மையான தகவலை வெளியிடும் மீடியா மீது தொடுக்கப்படும் அடக்குமுறையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். என்னை வலை வீசி பிடித்து அழிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஈக்வடார் அரசு, அந்நாட்டு மக்கள், நீதிக்காக போராடும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அனைவருக்கும் அசாஞ்ச் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

English summary
Julian Assange urged the US to end its "witch-hunt" against Wikileaks in his first public statement since entering Ecuador's London embassy. Speaking from a balcony on Sunday he thanked Ecuador's president for granting him asylum.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X