For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Kkarunanidhi
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது பற்றி தமிழகத்தின் சார்பில் முறையிடும்போதெல்லாம் அந்த ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சி கொடுப்பதும் தொடர்கதையாக நீடிக்கிறதே?

பதில்: இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் சம்பவத்தில் நடப்பதைப் போலத்தான், இந்தப் பிரச்சினையிலும் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இலங்கை ராணுவத்தினருக்கு, இந்தியா பயிற்சி அளிப்பது என்பதில்; நாம் முறையிட்டால் உடனடியாக அவர்களை வேறு மாநிலத்திற்குத் திருப்பி அனுப்புவதும், பிறகு மீண்டும் பயிற்சி அளிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தப் போக்கினை மத்திய அரசு இனியும் நீடிக்காமல், உடனடியாக இலங்கை அரசுடன் இந்தப் பயிற்சி குறித்தும், இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் கடுமையாகப் பேசி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Criticising the UPA government for continuing to allow training of Sri Lankan defence personnel in the country despite opposition to it in Tamil Nadu, DMK, a key ally of the ruling front, today said India should immediately stop such exercises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X