For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி:கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றோர் மீது போலீசார் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அனுமதிக்கக்கூடாது எனவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு என்ன?

கடந்த மாதம் 31-ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

English summary
Even as protests against the Kudankulam nuclear plant spread to Chennai today and police arrested members of different parties and organizations for blocking traffic during their protests, the loading of fuel in the reactors to start the nuclear power plant has been challenged in Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X