மழை நிவாரணப் பணிகளில் திமுகவினர் ஈடுபட கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் மழை நீடித்து வருவதால் நிவாரணப் பணிகளில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெருமழை பெய்து ஏழையெளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆங்காங்குள்ள தி.மு.க.வினர், மாவட்டக் கழகங்களின் சார்பிலும், பகுதி, வட்டக் கழகங்களின் சார்பிலும் நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வீடிழந்து தவிக்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கவும், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்ற உதவிகளைச் செய்யவும், அரசு அதிகாரிகளோடும், மக்கள் பிரதிநிதிகளோடும் தொடர்பு கொண்டும், அரசின் உதவிகளைப் பெற்றுத்தரவும் தங்களால் முடிந்த அளவிற்கு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!