For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் 2 ’விக்கெட்’ விழுந்துச்சுன்னா அவ்ளோதான்.. விஜயகாந்தின் எதிர்க்கட்சி அந்தஸ்து ‘டமார்’?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவை எத்தனையோ விசித்திரங்களை சந்தித்திருக்கிறது. அந்த வகையில் தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் இதுவரை ஜெயலலிதா நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர். இந்த தேமுதிக அணியில் இன்னும் 2 பேர் சேர்ந்து 'தனி ஆவர்த்தனம்' காட்டினால் விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பறிபோய்விடும். தமிழக சட்டப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியே இல்லாத ஒரு நிலையும் உருவாகிவிடும்!

தேமுதிகவோட நிலைமை

தற்போது தேமுதிகவுக்கு மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் 24 எம்.எல்.ஏக்கள் இருந்தாக வேண்டும்.

Vijayakanth
மொத்தம் உள்ள 29 பேரில் 4 எம்.எல்.ஏக்கள் விஜயகாந்துடன் முறைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டனர். இந்த 4 பேரை பின்பற்றி மேலும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தால் தேமுதிகவுக்கு சிக்கல்தான்

தனி அணி அல்லது கட்சி தாவுவது

இப்படி அதிமுகவை ஆதரிக்கும் தேமுதிக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனி அணியாக அங்கீகரித்துவிட்டால் விஜயகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பறிபோய்விடும்!

அல்லது மொத்தம் 29 எம்.எல்.ஏக்களில் சரிபாதிப் பேர் ஒரேடியாக அதிமுகவுக்கு தாவினாலும் தேமுதிக கதை முடிந்ததுதான்! ஒரு கட்சியில் இருந்து மூன்றில் 1 பங்கு எம்.எல்.ஏக்கள் கட்சி மாறும்போது அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயாது என்பதால் அப்படி ஒரு மூவ் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது!

ஆக மொத்தம் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கப் போவது என்பது உறுதியாகிவிட்டது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சி இல்லாத பேரவை

தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ‘பிரதான' எதிர்க்கட்சி எதுவும் இருக்காது. பிரதான எதிர்க்கட்சி இல்லாமலேயே சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டிய விசித்திரத்தை தமிழகம் காண வேண்டியிருக்கும்!

தமிழக சட்டப் பேரவையில் கட்சிகள் பலம்:

அ.தி.மு.க. - 150

தே.மு.தி.க. - 29 (-4)

தி.மு.க. - 23

மார்க்சிஸ்ட் கம்யூ. - 10

இந்திய கம்யூ. - 8

காங்கிரஸ் - 5

பா.ம.க. - 3

ம.ம.க. - 2

புதிய தமிழகம் - 2

பார்வர்டு பிளாக் - 1

நியமன உறுப்பினர் - 1

பேரவைத் தலைவர் - 1

மொத்தம் - 235

English summary
If 2 more DMDK Mlas to support ADMK that party will lose the 'main' official opposition party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X