For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுற்றுலாவை மேம்படுத்த விபச்சாரத்தை சட்ட ரீதியான தொழிலாக்க இலங்கையில் கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்ற அந்நாட்டின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்றில் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இப்பொழுது 40 ஆயிரம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது 'ஆட்பற்றாக்குறை' ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து அழைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக விபச்சாரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதையும் முன்னுதாரனமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

English summary
The Member of the Sri lanka's Southern Provincial Council (UPFA) Ajith Prasanna has proposed to legalize prostitution to boost tourism in the country. He made this proposal to the Ministry of Economic Development through the Southern Provincial Council.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X