For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தர்மபுரி வன்முறையில் பாமக நிர்வாகிகளின் தூண்டுதலும் காரணம்: திமுக குழு அறிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தர்மபுரி வன்முறைக்கு பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள சில்ரது தூண்டுதலும் பங்கும் இருக்கிறது என்று திமுகவின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரியில் தலித் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலர் பெ.வீ.கல்யாணசுந்தரம், திமுக தொண்டர் அணி செயலர் பொள்ளாச்சி மா. உமாபதி உள்ளிட்டோர் தலைமையிலான குழு அங்கு ஆய்வு செய்தது.

ஆய்வுக்குப் பின் இக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தர்மபுரி கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது. காதல் திருமணம் மட்டுமே இதற்குக் காரணமில்லை. பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும் பங்கும் உள்ளது.

காவல் துறையில் பணியாற்றும் இரண்டு சமூகத்தைச் சார்ந்த இரு காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையால், இந்தப் பிரச்சனை இன்னும் பெரிதாகி உள்ளது. காவல் துறையினரின் அலட்சியத்தால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசின் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. ஒரு சிலருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகையான ரூ. 50 ஆயிரம் போதுமானதாக இல்லை.இரு தரப்பு மக்களிடமும் இன்னும் பதற்றமும் அகலவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK today alleged that it was due to delay in taking proper action by police, violence let lose by caste Hindus at Dalit colonies in Dharmapuri district in protest of an inter-caste marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X