For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

12/12/12 ... இன்று அப்படி என்னதான் நடக்கப்போகுது?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரப்போகும் அதிசய நாள்தான் 12/12/12. இந்த நாளில் திருமணம் செய்துகொள்ளவும், சிசேரியம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளவும் போட்டி போட்டுக்கொண்டு புக் செய்துள்ளனர். இந்த நாளில் உலகில் என்னென்ன நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

12ல் என்ன சிறப்பு

12ல் என்ன சிறப்பு

பன்னிரண்டு என்ற எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. 12 ராசி, 12 மாதங்கள், கடிகாரத்தில் 12 எண்கள், ஒரு டஜன் என்பது 12 ஐ குறிக்கும். 2, 3, 4, 6 12 ஆகிய இந்த எண்களில் பின்னம் இன்றி வகுபடும் மிகச்சிறிய எண் 12.

அதிர்ஷ்டம் தரும் நாள்

அதிர்ஷ்டம் தரும் நாள்

ஐரோப்பா மட்டுமல்லாது கிழக்காசிய நாட்டினரும் நாள், மாதம், வருடம் எல்லாம் 12ம் எண்ணில் வருவதை அதிர்ஷ்ட நாளாக கருதுகின்றனர். இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் நினைப்பதால் திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். எனவே பல நாடுகளிலும் நாளை ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் 696 ஜோடி

ஹாங்காங்கில் 696 ஜோடி

சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் 12/12/12 அன்று திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்காங் நகரில் மட்டும் 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன் பதிவு செய்துள்ளனராம். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இது தவிர சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் நாளை திருமணம் செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.

சிசேரியன் செய்யுங்களேன்

சிசேரியன் செய்யுங்களேன்

மேலை நாடுகளைப்போல இந்தியாவிலும் இந்த நாளில் குழந்தை பிறந்தால் தங்களுக்கு அதிர்ஷ்டம் என்று கர்ப்பிணிகள் கருதுகின்றனர். தங்களின் குழந்தையை 12/12/12 தினத்தன்று சிசேரியன் செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் பல தாய்மார்கள் முறையிட்டுள்ளனராம். கொல்கத்தாவில் உள்ள மிக பிரபலமான மருத்துவமனையில் இந்த கூத்து நடக்கிறது. அவ்வாறு கேட்பவர்களிடம் கருவுற்று 9 மாதங்களாவது ஆனால்தான் சிசேரியன் செய்ய முடியும் என்று கூறி வருகின்றனராம் டாக்டர்கள்.

எதனால் இந்த மோகம்

எதனால் இந்த மோகம்

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் ஏதாவது ஒரு நாளை சிறப்பான நாளாக கருதுவார்கள். 10/10/10, 11/11/11 என்பது போல இந்த ஆண்டு 12/12/12 தேதி முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் உலகம் அழிந்துவிடும் என்று மேற்கத்திய நாடுகளில் புரளி கிளம்பினாலும் அதைப் பற்றி அச்சப்படாமல் அதை கொண்டாட முடிவு செய்து வருகின்றனர் ஒரு சாரார்.

அமெரிக்காவில் 12/12/12

அமெரிக்காவில் 12/12/12

அமெரிக்காவில் பத்து லட்சம் நாய்களின் உடலில் ‘ஹார்ட் வோர்ம்' என்ற புழு தாக்கியுள்ளதாம். இதன் மூலம் மனிதர்களுக்கு தொற்றுநோய் பரவும் என்று அஞ்சப்படுவதால் 12.12.12 என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் 12 டோஸ் தடுப்பு மருந்தை 12 சதவிகிதம் பேருக்கு 2012 முடிவதற்குள் தர முடிவு செய்துள்ளனர்.

தோஹா சர்வதேச விமான நிலையம்

தோஹா சர்வதேச விமான நிலையம்

இந்த நாளில்தான் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதேபோல் 2013ம் ஆண்டு பிரான்சில் நடைபெற உள்ள அரேபிய பந்தையக் குதிரை போட்டிகளுக்கான அறிவிப்பு 12/12/12 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் மரம் நடுகின்றனர்

தூத்துக்குடியில் மரம் நடுகின்றனர்

இந்த நாளில் தூத்துக்குடியில் 12ம் தேதி 12 மணி 12 நிமிடத்தில் மரக்கன்றுகள் வழங்கும் புதிய திட்டம் துவக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரோட்டரி கிளப்புடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து நாளை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 812 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம் துவக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி முத்துநகர் பீச்சில் நடைபெறும் விழாவில் பசுமை தாயக இயக்கத்தை சேர்ந்த நடிகர் விவேக் பங்கேற்று பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குகிறார்.

டிசம்பர் 13ல் விடை கிடைக்கும்

டிசம்பர் 13ல் விடை கிடைக்கும்

என்னதான் தைரியமாக இருந்தாலும் பலருக்கும் ஒரு வித அச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கேற்றார்போல கடந்த சில தினங்களாக ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு மக்களுக்கு உலக அழிவைப் பற்றி நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் டிசம்பர் 13ம் தேதி விடை தெரிந்துவிடும்.

English summary
Couples from Hong Kong and Singapore are flocking to tie the knot on 12/12/12, sparking a wedding boom on the century's last repeating date seen as auspicious by some to guarantee a happy marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X