For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிலாரி க்ளிண்டனின் பதவிக்கு அடுத்து வரப்போவது யார்?

By Shankar
Google Oneindia Tamil News

 Hillary Clinton
வாஷிங்டன்: 'பிஸ்கல் க்ளிஃப்' என்ற பொருளாதார தேக்க நிலைக்கு அரசியல்வாதிகள் தள்ளி விடுவார்களோ என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், அதற்கு நிகராக பரபரப்பாக பேசப்படுவது ‘ஹிலாரி க்ளிண்டன் பதவியில் அமரப் போவது யார் என்பதுதான்'.

ஒய்வு பெறும் ஹிலாரி

ஒபாமா வெற்றி பெற்று இரண்டாம் தடவையாக ஆட்சியை பிடித்தாலும், வெளியுறவுத் துறை செயலாளராக (அமைச்சர்) தொடர்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்று ஹிலாரி உறுதியாக தெரிவித்து விட்டார்.

இதுவரை பணியாற்றிய வெளியுறவுத் துறை செயலாளர்களில், ஹிலாரி அதிகப்படியான தூரம் பயணம் செய்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரது செயல்பாடுகள் பெரும்பான்மையானவர்களால் வரவேற்கப்பட்டுள்ளன.

பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் குடும்பத்தினருடன் செலவிட விரும்புவதாக சொன்னாலும், 2016 தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் பதவி விலகுகிறார் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் தேர்தல் பிரச்சாரம் கூட செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய சூசன் ரைஸ்

ஒபாமாவின் முந்தைய அமைச்சரவையில் யு.என் அமைப்பிற்க்கான அமெரிக்க செயலாளராக பதவி வகித்த சூசன் ரைஸ் தான், ஹிலாரயின் இட்த்தை நிரப்பப் போகிறார் என்ற செய்திகள் பலமாக வந்து கொண்டிருந்த்து. ஒபாமாவும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். பெங்காஸி சம்பவத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்துவிட்டார் ரைஸ் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தன.

அமெரிக்காவில் அமைச்சர் பதவி ஏற்பவர்கள் பாராளுமன்ற குழுவினர் முன்பு இன்டெர்வியூ போல் நேர்முக அழைப்பில் பங்கேற்று, உறுப்பினர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். செனட், காங்கிரஸ் உறுப்பினர்கள் நினைத்தால் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்ய முடியும். சூசன் ரைஸ் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கியதால், அவர் தனது விருப்பத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் அதிபர் வேட்பாளர் ஜான் கெர்ரி

சூசன் ரைஸ் போட்டியில் இல்லாத நிலையில், 2004 தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற, மச்சூசெட்ஸ் செனட்டர் ஜான் கெர்ரி, ஒபாமாவின் அடுத்த தேர்வு எனத் தெரிகிறது. அவர் தற்போது செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராக இருந்து பல்வேறு நாடுகளுக்கிடையே உறுவுகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதனால், அடுத்த வெளியுறவுத்துறைச் செயலாளருக்கு பொருத்தமானவர் என்று குடியரசுக் கட்சியினரும் தெரிவித்துள்ளனர். எதிர்க் கட்சியைச் சார்ந்த ஜான் மெக்கய்ன் ‘ அடுத்த செயலாளர் என்றே கெர்ரியை ஜாலியாக கிண்டல் செய்து அழைத்து விட்டார்.

சிஷ்யனுடன் பணியாற்றப் போகும் குரு

இலனாய் மாநில செனட்டாரக இருந்த ஒபாமா 2004 தேர்தலில் முதன் முறையாக அமெரிக்க செனட்டர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது நடந்த ஜனநாயகக் கட்சி தேர்தலில் அதிபர் பதவிக்கு ஜான் கெர்ரி தேர்வு செய்யப் பட்டார். மாநாட்டில் சிறப்புரையாற்ற யாரை அழைக்கலாம் என்று கெர்ரியிடம் கேட்ட போது அவர் ஒபாமாவை அழைத்தார். தேசிய அளவில் ஒபாமாவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு அது தான். ஒபாமாவின் சிறப்புரை பெரும் வரவேற்ப்பை பெற்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

அந்த வகையில் ஒபாமாவுக்கு தேசிய வாய்ப்பு கொடுத்த ‘குரு' ஜான் கெர்ரி தான். 2008 தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜான் கெர்ரிக்கு மிகுந்த மரியாதையுடன் பயன்படுத்திக் கொண்டார். 2012 தேர்தலில் ஜான் கெர்ரி, ஒபாமாவுக்கு பெரும் உதவியாக இருந்து தேர்தல் சவால்களை முறியடிக்க உறுதுணையாக இருந்தார். அதிபர் விவாதத்திற்கு தயார் செய்ய, கெர்ரி எதிர்கட்சி வேட்பாளர் 'மிட் ராம்னி' போல் பயிற்சி விவாதத்தில் பங்கு எடுத்துக் கொண்டார்.

அன்று மாநாட்டு சிறப்பு சொற்பொழிவாளராக ஒபாமாவை தேர்வு செய்தார் கெர்ரி. இன்று வெளியுறவு அமைச்சராக கெர்ரியை தேர்வு செய்வாரா ஒபாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Who is next after Hillary Clinton? is the lead question raised by every one now in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X