For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.... பலாத்கார தலைநகரமாகும் அபாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி திகழ்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிபரம். பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பலாத்காரக் குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.

டெல்லியைவிட மும்பையானது சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையை அதிகம் கொண்டிருந்தாலும் டெல்லியை ஒப்பிடுகையில் மும்பையில் பாதி அளவே கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது. மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது என்று தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பலாத்காரத் தலைநகரம்

பலாத்காரத் தலைநகரம்

டெல்லி நகரம் இந்திய நாட்டின் பெருமைமிகு தலைநகரம் என்ற பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. 2011ம் ஆண்டு மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். கடந்த 5 ஆண்டுகளாக டெல்லி மட்டும் பலாத்கார குற்றங்களில் முதலிடம் வகித்து வருகிறது.

மும்பையில் 239

மும்பையில் 239

மும்பையில் கடந்த ஆண்டு 239 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையானது சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையை அதிகம் கொண்டிருக்கிறது.

பெங்களூரில் 96 குற்றங்கள்

பெங்களூரில் 96 குற்றங்கள்

பெங்களூரில் 96 பலாத்கார குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தவிர கடந்த ஆண்டு சென்னையில் 76 குற்றங்களும், கொல்கத்தாவில் 47 பாலியல் குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாக அந்த தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோபாலிடன் நகரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா திகழ்கிறது.

அண்டை மாநிலங்களில்

அண்டை மாநிலங்களில்

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான். ஹரியானாவில் 6 பெண்களும், ராஜஸ்தானில் 5 பெண்களும், உத்தர பிரதேசத்தில் 2 பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஒரு லட்சத்தில் 7பேர்

ஒரு லட்சத்தில் 7பேர்

டெல்லியில் ஒரு லட்சம் பெண் மற்றும் சிறுமிகளில் 7 பேர் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். இதோடு ஒப்பிடுகையில், மும்பையில் 3 பெண்களும், பெங்களூர் மற்றும் சென்னையில் 2 பெண்களும் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் கொல்கத்தாவைப் பொறுத்தவரை 3 லட்சம் பெண்களில் 2 பேர் மட்டுமே பாலத்காரத்திற்கு ஆளாகின்றனர்.

போக்குவரத்து அதிகம்

போக்குவரத்து அதிகம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் அதிகரிக்க அதன் அண்டை மாநில மக்களின் போக்குவரத்து அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம் என தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு கூறுகிறது.

பாதுகாப்பு இல்லை

பாதுகாப்பு இல்லை

இந்த சூழ்நிலையில் ஞாயிறு இரவில் டெல்லியில் நடைபெற்ற சம்பவம் மாணவிகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனையடுத்து வீதியில் இறங்கி அவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். மறியலில் ஈடுபட்ட அவர்கள், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

English summary
A look at the National Crime Records Bureau data confirms the worst fears about Delhi: 572 women were raped in the city last year as compared to 239 in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X