For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: 16 வயதாக இருந்தபோது 42 பேரால், 40 நாட்களுக்கு சீரழிக்கப்பட்ட ஒரு பெண் தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காமல் தொடர்ந்து மன வேதனையில் உழன்று கொண்டுள்ளார்.

கேரளாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சூர்யநெல்லி பலாத்கார வழக்குதான் இது. இடுக்கி மாவட்டம் சூர்யநெல்லி கிராமத்தில் நடந்த கொடூரமான பலாத்கார கொடுமை இது.

1996ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, அப்போது 16 வயதாக இருந்த அப்பெண்ணை கடத்தினார் ஒரு பஸ் கண்டக்டர். முதலில் அவர் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் அடுத்த 40 நாட்களுக்கு அப்பெண்ணை 42 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். ஒவ்வொரு ஊராக அப்பெண்ணைக் கொண்டு சென்று கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து, அடித்து உதைத்து பலாத்காரம் செய்தனர்.

இந்தக் கொடும் செயலால் பெரும உடல் பாதிப்புக்குள்ளானார் அப்பெண். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த வழக்கு. பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்கள் என்பதால் அரசு அமைதி காத்தது. ஆனால் பெருகி வந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக 1999ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதுதான் பாலியல் பலாத்கார வழக்குக்காக கேரளாவில் நியமிக்கப்பட்ட முதல் தனி கோர்ட் ஆகும்.

இந்த வழக்கில் 35 பேரை கீழ்க் கோர்ட் குற்றவாளி என்று அறிவித்தது. ஆனால் கேரள உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து ஒருவரை மட்டுமே குற்றவாளி என தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண்ணின் குடும்பமும், அரசும், உச்சநீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு அப்பீல் செய்தனர். அதில் இதுவரை விசாரணை தொடங்கவே இல்லை.

பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண் இன்று வரை நியாயம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் அவரது குடும்பத்தையும் மக்கள் ஒதுக்கி வைத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில், யாரும் எங்களை சேர்த்துக் கொள்வதில்லை. எங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். யாரும் எஙகளுடன் பேசுவதில்லை. இந்த நிலை காரணமாக நாங்கள் வெளியில் போவதே இல்லை என்று கூறுகிறார்.

பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு அரசு பியூன் வேலை போட்டுக் கொடுத்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் திருட்டுப் பட்டம் கட்டி அவரை சஸ்பெண்ட் செய்து விட்டனராம்.

English summary
When she was 16, she was raped by 42 men in 40 days. In Kerala, her case is known as the Suryanelli rape case, after the village where she lived with her parents. They have moved houses twice since then, driven out they say by jeering neighbours. "Nobody accepts us; when they see us, they try to avoid us. We don't go out," said her father.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X