நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை... விஜயகாந்த்: மறுபடியும் முதல்ல இருந்தா?!
தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை, தேமுதிக தனித்தே தேர்தலை எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று பொங்கல் பண்டிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பின்னர் பொங்கல் பொருட்களை வழங்கி அவர் பேசியதாவது:
தடை இல்லா மின்சாரம் வழங்குவேன் என உறுதியளித்த ஜெயலலிதா தற்போது மத்திய அரசின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது என்று விஜயகாந்த் கூறினார்.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது செயல்படாமல் இருந்த அரசு இப்போது அமைச்சர்களை அனுப்பி ஆய்வு நடத்துகிறது என்றார். இது மக்களை முழுவதும் ஏமாற்றும் முயற்சி என்றும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக முன்னதாக அதிமுக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் முதல்ல இருந்தா?!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications