For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிதான் பிரதமர் வேட்பாளரா? கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டுங்க..: ஐக்கிய ஜனதா தளம்

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
டெல்லி: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்த உடனேயே அதற்கு கடும் எதிர்ப்பு கூட்டணிக் கட்சிகளிடத்தில் இருந்து எழுந்துள்ளது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மதச்சார்பற்ற ஒருவர்தான் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளத்தின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு காரணமாகவே மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்தாலும் நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் மோடி எதிர்ப்பு என்பதால் மட்டுமே பீகாரில் அவரால் மதச்சார்பற்ற அரசியல் என்பதை பேசி வருகிறார்.

இந்த சூழலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடியை அறிவித்தே ஆக வேண்டும் என்று யஷ்வந்த் சின்ஹா போன்றோர் குரல் எழுப்பியிருப்பதன் மூலம் ஐக்கிய ஜனதா தளம் மிகவும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை உடனே கூட்டி இது குறித்து முடிவெடுத்தாக வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை உடனே அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்திய நிலையில் அக்கூட்டணியி யஷவந்த் சின்ஹா புதிய பஞ்சாயத்துக்கு வித்திட்டிருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு கூட்டுக் கட்சியான சிவசேனாவும் கூட, தற்போது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இதுவல்ல என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
JD(U) says that BJP should discuss their choice of PM candidate with all the constituents of the NDA and says that they will not compromise with their secular agenda
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X