For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஸ்வரூபமான சாதி திமிர் பேச்சு' : ஆசிஷ் நந்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை!

By Mathi
Google Oneindia Tamil News

Ashis nandy
டெல்லி: நாட்டின் ஊழலுக்கே எஸ்.சி.எஸ்.டி, பிசி பிரிவினர்தான் காரணம் என்று திமிராகப் பேசிய சமூகவியலாளர் ஆசிஷ் நந்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் கடந்த 24-ந் தேதி நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய ஆசிஷ் நந்தி, அதிகாரத்துக்கு எஸ்.சி., எஸ்.டி, பிசி பிரிவினர் வந்ததாலேயே ஊழல் அதிகரித்துவிட்டது என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் கண்டனத்தை உருவாக்கியது.

இதைத் தொடர்ந்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் ராஜஸ்தான் மாநில போலீசாரும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனால் தம்மை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துவிடுவார்களோ என்று அஞ்சிய ஆசிஷ் நந்தி, உச்சநீதிமன்றத்தில் தம்மை கைது செய்ய தடை விதிக்கக் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆசிஷ் நந்தியை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

இதனிடையே ஆசிஷ் நந்தியை விசாரணைக்கு ஆஜராக ராஜஸ்தான் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
The Supreme Court will on Friday hear sociologist Ashis Nandy's petition seeking the quashing of all FIREs against him and protection from arrest in connection with his controversial anti-Dalit remarks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X