For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூகத் தீர்வு கண்ட ஜெயலலிதா, கமல்ஹாசனுக்கு நன்றி - தேசிய லீக்

Google Oneindia Tamil News

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் சுமூ்கத் தீர்வு காண உதவிய முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் நன்றி கூறுவதாக தேசிய லீக் கட்சியின் அமைப்புச் செயலாளர் சீனி அஹமது கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், விஸ்வரூபம் திரைப்பட பிரச்சனையில், முஸ்லீம் அல்லாதவர்களிடமிருந்து, முஸ்லீம்களை பிரிக்க சில தீயசக்தி செயல்பட்டது. பிரச்னை ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது.

எங்கள் கட்சித்தலைவர் பசீர்அஹமது உள்ளிட்ட மூஸ்லீம் கூட்டமைப்பினர் ஜனவரி 21ஆம் தேதி அந்த திரைப்படத்தை பார்த்தார்கள். பின்னர் அவர்கள் கருத்து எதுவும் கூறவில்லை.

சில அரசியல் கட்சிகள் மூஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட தொடங்கின. இந்நிலையில் சர்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கமல் ஒப்புக்கொண்டார். இந்த திரைப்பட பிரச்னை தொடங்கியதுமுதல் எங்கள் தலைவர் அனைத்து பேச்சுவார்த்தையிலும் பங்கு பெற்றுள்ளார்.

தொடக்கத்தில் திரைப்படத்தில் சர்ச்சைக்கு உரியகாட்சிகள் 15 உள்ளது எனக்கூறினார்கள். ஆனால் தற்போது கமல் 7 காட்சிகளை நீக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒருவகையில் மூஸ்லிம் அமைப்புக்களுக்கு பின்னடைவுதான். எனி்னும் இப்பிரச்னையை தீர்க்க பாடுபட்ட முதல்வர் மற்றும் கமலுக்கு நன்றியை எங்கள் கட்சி சார்பில் கூறிக்கொள்கிறோம் என்றார் அவர்.

English summary
Natioanl League has thanked chief minister Jayalalitha and actor Kamal Haasan for finding an amicable solution to Viswaroopam movie issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X