For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூருவில் பெண் மார்பகப் புற்றுநோயாளிகள் அதிகம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உலக அளவில் இருதய நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம் என்ற நிலையில், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ம் தேதி கடைபிடிக்கப்பட்டதை ஒட்டி இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், பல்வேறு வகையான புற்றுநோய்களால் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2030 ஆம் ஆண்டில் 2.14 கோடி புதிய புற்றுநோயாளிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய, பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் தாக்குதல் இன்று அதிகரித்து வருகிறது. நகர் புறங்களில் வாழும் 1: 28 என்ற விகிதத்தில் பெண்களை இந்த நோய் தாக்குகிறது. பெங்களூருவில் உள்ள பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது ஒரு கணக்கெடுப்பு.

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் ரத்தத்தில் அதிகமாக சுரப்பதினால் அதிக உடல் பருமன், கொழுப்பு மிகுந்த உணவுப்பண்டங்களை உண்ணுதல். இளம் வயதில் பருவமடைதல், குறைந்த காலம் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பது போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன.

என்ன அறிகுறிகள்

என்ன அறிகுறிகள்

மார்பில் வலியற்ற கட்டிகள், காம்பிலிருந்து நீர் வடிதல், மார்பக நிறம் மாறுதல் போன்றவை தெரிந்தால் உடனே தக்க மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். இவை அனைத்தும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாகும். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் மாமோகிராம் போன்ற தற்காப்பு ஸ்கிரீனிங் டெஸ்டும் இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும்.

சோதனை அவசியம்

சோதனை அவசியம்

மார்பக புற்றுநோய் வருவதை கண்டறிய மாமோகிராம் என்னும் "ஸ்கிரீனிங்' டெஸ்ட் உதவுகிறது. இதை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஆண்டுதோறும் மேற்கண்ட தகுந்த சிகிச்சை பெறலாம். இந்த மாமோகிராம் டெஸ்ட், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் கதிர்களை கொண்டு வலியின்றி செய்யப்படும்.

கருப்பை வாய் புற்றுநோய்

கருப்பை வாய் புற்றுநோய்

இந்தியாவில் செர்வைகல் கேன்சர் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பான மரணத்துக்கு முதல் காரணமாகும். இன்று, உலகில் செர்வைகல் கேன்சரால் இறக்கும் 4 ல் 1 பெண் இந்தியராக இருக்கிறார். கடந்த ஆண்டு 72, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் செர்வைகல் கேன்சரால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 027 பெண்களை இந்த புற்றுநோய் தாக்குகிறது. செர்வைகல் கேன்சர் என்பது கர்ப்பப்பையின் வாய் பகுதியில் வரும் புற்றுநோய் ஆகும்.

பரவாமல் தடுக்கலாம்

பரவாமல் தடுக்கலாம்

கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் இந்த எச்.பி.வி., வைரசின் தாக்கத்தினால் ஏற்படும் மாற்றியங்கள் எளிய ஸ்மியர் டெஸ்ட் மூலம் கண்டறியலாம். பேப் ஸமியர் டெஸ்ட் புற்று நோய் வருவதற்கு முன் ஏற்படும் ஆரம்ப குறிகளை கண்டறிய உதவும். மேலும், தகுந்த சிகிச்சை மூலம் நோய் முற்றிலும் பரவாமல் இருக்க வழிவகுக்கும்.

தடுப்பூசி போட்டுக்கலாம்

தடுப்பூசி போட்டுக்கலாம்

தற்போது, செர்வைகல் கேன்சர் வராமல் தடுக்க செர்வைகல் கேன்சர் தடுப்பூசி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சரை தடுக்கிறது. இந்த தடுப்பூசியை எல்லா வயது பெண்களும் போட்டுக் கொள்ளலாம். எனினும் இளம் பெண்கள் பருவமடைந்த உடனே போட்டுக் கொள்வது மிகவும் சிறந்ததாகும்.

பெங்களூரு நம்பர் 1

பெங்களூரு நம்பர் 1

நகர்ப்புறம், கிராமப்புறம் எனப் பாகுபாடின்றி புற்றுநோய் தாக்குகிறது. இந்தியாவிலேயே மார்பகப் புற்றுநோயினால் அதிக அளவில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தொடர்பான புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் 1 லட்சம் பெண்களில் 139 புதிய நோயாளிகள் மார்பகப் புற்றுநோயினால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். டெல்லி இரண்டாம் இடத்திலும், சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சரியான விழிப்புணர்வு

சரியான விழிப்புணர்வு

பெங்களூருவில் ஒரு லட்சம் பேரில் 19 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனராம். நகர்புற பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்றால் கிராமப்புற பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

நிச்சயம் குணப்படுத்தலாம்

நிச்சயம் குணப்படுத்தலாம்

உடல் பரிசோதனைகள் மூலம் புற்று நோயை துவக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகமுடியும். 20 வயது முதல் 40 வயதுக்குள்பட்டோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், புற்றுநோய் அறிகுறி தெரிந்தால் உடனடியாக தேவையான சிகிச்சை பெற்று குணமடையலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
Bangalore tops the list of metros in the country with the highest number of women suffering from cancer and breast cancer continues to be the killer, according to the Population Based Cancer Registry (PBCR).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X