அடுத்தவன் நிலத்தை பட்டாபோடும் ஈனத்தனமானவர்கள் திமுகவினர்: அமைச்சர் செந்தூர் பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: அடுத்தவன் நிலத்தை பட்டாபோடும் ஈனத்தனமானவர்கள் திமுகவினர் என்று கதர் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சியில் மக்களுக்கு அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவை வழங்காமல் இருந்தது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. மைதீன் கான் தொகுதியான பாளையங்கோட்டைக்கு உட்பட்ட திமுகவின் சுப்பிரமணியன் கவுன்சிலராக இருக்கும் நெல்லை மாநகராட்சியின் 6வது வார்டில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் மேயராக இருந்தும் திமுக கவுன்சிலர் வார்டில் இலவச பொருட்கள் வழங்கப்படுவது குறித்து அதிமுகவினரிடையே சர்ச்சை எழுந்தது.

நெல்லை மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நடந்த விழாவில் கதர் துறை அமைச்சர் மக்களுக்கு இலவசங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது,

இது திமுக வார்டு தான், திமுக சட்டசபை தொகுதி தான். இருந்தாலும் கட்சி பார்க்காமல் அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆனால் திமுககாரன் அடுத்தவன் நிலத்தை பட்டாபோடும் ஈனத்தனமானவர்கள். திமுகவினர் தான் கட்சி பாகுபாடு பார்ப்பவர்கள்.

கடந்த ஆட்சியின்போது அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் இலவசமாகத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றினார் கருணாநிதி. அதனால் திமுககாரனைப் போன்று பிராடு பித்தலாட்டக்காரன் நாட்டிலேயே கிடையாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+