For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி!

By Mathi
Google Oneindia Tamil News

Ragothaman
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்று அக்கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்திருக்கிறார்.

அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ராஜிவ் கொலையாளிகள் விவகாரமும் அப்சல் குரு விவகாரமும் எப்படி வேறுபட்டது என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை தூக்கிலிட்டால் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் இந்த வழக்கிக் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்தக் கட்டுரைக்காக பேட்டியளித்திருக்கும் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை அதிகாரி ரகோத்தமனோ வழக்கு விசாரணையே இன்னமும் முழுமை அடையவில்லை என்று கூறியுள்ளார்.

ராஜிவ் கொலையாளிகளான தணு மற்றும் சிவராசனுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினருக்குமான தொடர்பு என்ன? 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி திடீரென ரத்து செய்தது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கு மரகதம் சந்திரசேகர் மற்றும் கருணாநிதியிடம் விசாரணையே நடத்தப்படவில்லை. ஒரு வழக்கில் அத்தனை அம்சங்களுமே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அப்படி நடக்கவில்லையே என்று குமுறியிருக்கிறார்.

இதேபோல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The talk in Tamil Nadu political circles is there is no political gain to be had in hanging the three Rajiv Gandhi case accused. Also, there has been a hot debate here about the SIT investigation, triggered again by the recent ‘revelation’ by the investigating officer of the Rajiv case, Mr K Ragothaman, that his then chief D. R. Karthikeyan had pushed under the carpet some important elements in the probe. “They wanted to save certain people who were unwittingly involved in the case. The help given by Maragatham Chandr­asekar’s family to enable Dhanu (woman bomb) and Sivarasan to get into the sterile zone was suppressed. They said the two just barged into the area. Also, DMK chief Karunanidhi was to hold an election meeting that night but he cancelled it. I am not saying that Maragatham and Karunanidhi were part of the LTTE plot, but we should have questioned them”, Mr Ragothaman told Deccan Chronicle, adding, “When such a major crime was investigated, we should have been completely thorough but that was not the case”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X