For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்த சர்ச்சையில் பதவியிழந்த பிரிட்டிஷ் தூதர் வழக்கு

Google Oneindia Tamil News

Kim Simplis and John Yapp
லண்டன்: பெலிஸ் நாட்டுப் பிரதமரின் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்ததாக சர்ச்சையில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஒருவர் இங்கிலாந்து அரசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து அரசு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக 10 லட்சம் பவுண்டு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அந்தத் தூதரின் பெயர் ஜான் யாப். இவர் பெலிஸ் நாட்டில் (வட, தென் அமெரிக்காவுக்கு இடையே மத்திய அமெரிக்காவில் உள்ள குட்டி நாடு இது) உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணைத் தூதராக இருந்து வந்தார்.கடந்த 40 ஆண்டு காலமாக அவர் இங்கிலாந்து வெளியுறவுப் பணியில் இருந்து வந்தவர் ஆவார்.

இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெலிஸ் நாட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது பெலிஸ் பிரதமர் டீன் பாரோவின் மனைவி கிம் சிம்ப்ளிஸிடம் முறைதவறி நடந்து கொண்டு அவரது பின்பக்கத்தைப் பிடித்து விட்டதாக இவர் மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவரை இங்கிலாந்து அரசு சஸ்பெண்ட் செய்து நாட்டுக்குத் திரும்ப உத்தரவிட்டது.

ஆனால் இந்தப் புகார்களை யாப் மறுத்தார். அவரது வழக்கறிஞர்களும் மறுத்தனர். மேலும் விசாரணைக்குப் பின்னர் இங்கிலாந்து வெளியுறவுத்துறையின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவும், யார் தவறு செய்ததாக தெரியவில்லை என்று தெரிவித்தது.

இதையடுத்து தற்போது யாப், இங்கிலாந்து அரசு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக 10 லட்சம் பவுண்டு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னதாக யாப்,யாருடைய பின்பக்கத்தையும் பிடிக்கவில்லை என்று அதே பார்ட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அமெரிக்கத் தூதர் ராபர்ட் டயட்டரின் மனைவி கியானித் டயட்டர் ஆதரவுக் குரல் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாப், கியானித்தின் பின்பக்கத்தையும் கூட பிடித்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு என்பது முக்கியமானது....

English summary
A former British High Commissioner who was ordered home after he was accused of touching the bottom of a politician’s wife is suing the Government for £1million. John Yapp said that despite being cleared by the Foreign Office of the ‘scurrilous’ claim, he found himself sidelined and ‘ostracised’ before he retired after a 40-year career.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X