For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட் பை போப்.... டாப்லெஸ் ஆர்ப்பாட்டம் செய்த 8 பெண்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Topless protest
பாரீஸ்: பாரிஸ் நகரின் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 8 பெண்கள் டாப்-லெஸ் ஆட்டம் போட்டதில், பரபரப்பு ஏற்பட்டது.

பாரீஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கதீட்ரல் தேவாலயத்துக்கு, உடலை மறைக்கும் கால் வரை நீண்ட கோட் அணிந்து 8 பெண்கள் வந்தனர். பிரார்த்தனைக்காகவே வருகிறார்கள் என்றே அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

திடீரென இந்த 8 பெண்களும் அவர்கள், அணிந்திருந்த கோட்டுகளை கழட்டிவிட்டு, கோஷங்களை எழுப்ப தொடங்கினர். அப்போதுதான், அவர்கள் டாப்-லெஸ் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள் என அங்கிருந்தவர்கள் தெரிந்து கொண்டனர்.

"போப் இனி இல்லை" எனவும், "குட்பை போப் பெனடிக்ட்" என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர். புனித போப்பாண்டவர் பெனடிக்ட் XVI பதவி விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்தே இவர்கள் இந்த அரை நிர்வாண ஆட்டத்தை பேட்டனர்.

"இது ஒரு புனிதமான இடம். இங்கு இப்படியெல்லாம் செய்யக்கூடாது" என்று அங்கிருந்த பிரெஞ்ச் பெண் ஒருவர் கூறியதையும் இவர்கள் கேட்பதாக இல்லை. அதையடுத்து, தேவாலய காவலர்கள் வந்து இவர்களை கைகளைப் பிடித்து வெளியே இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

English summary
Topless women activists pounded a huge church bell in Notre Dame Cathedral in Paris to "celebrate" the pope's resignation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X