For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Air ticket scam
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமானப் பயணக் கட்டணத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி கவார், மாநிலங்களவை செயலகத்தின் மீது தான் இந்த அதிர்ச்சிகரமான புகார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி கவார், டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு வழி பயணத்திற்காக தனியார் விமான நிறுவனத்துக்கு ரூ.99,292 செலுத்தப்பட்டு இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பயணம் செய்ததற்கு மாநிலங்களவை செயலகம், வெளிநாட்டு கட்டணம் செலுத்தியுள்ளதை அறிந்த கவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் தமக்காக செலுத்தப்பட்ட விமான கட்டணங்களை ஆய்வு செய்த போது, மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

சென்னை-ஐதராபாத் ஒரு வழி பயணத்துக்கு ரூ.35,000, ஐதராபாத்-பெங்களூரு பயணத்துக்கு ரூ.67,000 செலுத்தப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கவார் புகார் தெரிவித்துள்ளார்.

டிராவல் ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத்திற்காக மிகப் பெரிய கட்டணத்தை அரசு கட்டுவதால், மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் நடந்துள்ள ஊழலில் அமைச்சர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

English summary
The Rajya Sabha secretariat paid long haul international fares for domestic air tickets for one of its members. The scam was detected only when the MP realized the incredulous prices paid for the tickets and then complained to the government.The secretariat paid Rs 99,292 for a one-way Delhi-Chennai flight on Jet Airways for Ashk Ali Tak, a Congress RS member from Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X