For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாலியன்வாலா பாக் படுகொலை அவமானகரமானது - இங்கிலாந்து பிரதமர் கேமரூன்

Google Oneindia Tamil News

David Cameron
டெல்லி: வெள்ளையர் ராணுவம், பஞ்சாபின் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய கொடூரக்கொலைகள் மிகவும் அவமானகரமானது என்று இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஜாலியன்வாலா பாக்குக்கு இன்று சென்றார் கேமரூன். அங்குள்ள நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் அவர் எழுதுகையில், இங்கிலாந்து வரலாற்றில் இது மிகவும் அவமானகரமானதாகும். அந்த சமயத்தில் இதுகுறித்து வின்ஸ்டன் சர்ச்சிலும் சரியான முறையில் கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. அமைதி வழியில் போராடுவோருக்கு இங்கிலாந்து முழு ஆதரவு தரும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன் என்றார் அவர்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்கு இதுவரை எந்த இங்கிலாந்து பிரதமரும் வந்ததில்லை. கேமரூன்தான் முதல் இங்கிலாந்துப் பிரதமர் ஆவார். இன்றைய வருகையின்போது வருத்தம் தெரிவித்தாரே தவிர மன்னிப்பு எதையும் அவர் கேட்கவில்லை.

1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வெள்ளைக்காரப் படையினர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் தலைமையில் இங்கு நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு பல ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

English summary
British Prime Minister David Cameron Wednesday termed as "shameful" the Jallianwala Bagh massacre of innocent Indians by British troops. "This was a deeply shameful act in British history. One that Winston Churchill rightly described at that time as monstrous. We must never forget what happened here and we must ensure that the UK stands up for the right of peaceful protests," Cameron wrote in the visitors' book of the memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X