For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மம்தாவை இழிவு படுத்தும் படம்: சென்சார் போர்டு தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Mamata Banerjee
கொல்கத்தா: மம்தா பானர்ஜியை இழிவு படுத்தும் விதமாக படம் எடுக்கப்பட்டுதாக கூறி இயக்குனர் சுமன் முகோபத்யாயா இயக்கியுள்ள, ‘கங்கல் மல்சத்' என்ற படத்துக்கு தடை விதித்துள்ளது மத்திய தணிக்கை குழு.

வங்க மொழிப் படமான இதில், திரிணமுல் காங். அதிருப்தி எம்.பி.யான கபீர் சுமன், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மமதா பானர்ஜி முதல்வராக பதவியேற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளதாகவும், அந்த காட்சியும், அதில் உள்ள வசனங்களும், மமதாவை இழிவுபடுத்துவது போல் உள்ளதாகவும் கூறி, அந்த படத்தை வெளியிட மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.

டாடாவுக்கு எதிரான போராட்டம்

இந்தப் படத்தில் மமதா பதவியேற்கும் காட்சிகள் மட்டுமன்றி, மேற்கு வங்கத்தில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைவதை எதிர்த்து, மம்தா பானர்ஜி நடத்திய போராட்டங்கள் குறித்தும் விமர்சிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.

வன்முறைக்கு வாய்ப்பு

இந்த படத்தில் உள்ள சில காட்சிகள் வரலாற்றை சிதைப்பது போலவும், முதல்வர் மமதாவை இழிவுபடுத்துவது போலவும் உள்ளன. இது, மேற்கு வங்க மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தை வெளியிட அனுமதித்தால், மேற்கு வங்கத்தில் வன்முறை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது" என்று படத்தின் தயாரிப்பாளருக்கு தணிக்கை வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றம் செல்வோம்

படத்துக்கு தடை செய்யப்பட்டது குறித்து, மேற்கு வங்கத்தில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. "இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவின் தலைவர் ஹரநாத் சக்கரவர்த்தி. இவர் ஒரு வங்க மொழி சினிமா இயக்குனர். அத்துடன் மமதாவின் மிக நெருங்கிய நண்பர். அதனால்தான் அவர் படத்துக்கு தடை விதித்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளோம்" என்கிறார்கள், தடையை எதிர்ப்பவர்கள்.

English summary
The censor board has refused to clear a Bengali film for taking potshots at the swearing-in ceremony of West Bengal chief minister Mamata Banerjee and the Singur movement that forced the Tatas to exit the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X