வருகிறது அனுபூதி... மாறப் போகின்றன இந்திய ரயில் பெட்டிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இதுவரை வெளிநாட்டு சொகுசான ரயில் பெட்டிகளைப் பார்த்து பொறுமிக் கொண்டிருந்த நாம் இனிமேல் அந்தப் பொறுமலை விட்டு விடலாம். காரணம், இந்திய ரயில் பெட்டிகளும் அந்த அளவுக்கு மாடர்ன் பெட்டிகளாக மாறப் போகின்றன.

அனுபூதி என்ற பெயரில் புதிய அதிநவீன, அழகிய ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவின் சொகுசு ரயிலான சதாப்தி ரயில்களில் இந்தப் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. பார்க்கவே படு அழகாக இருக்கின்றன இந்த பெட்டிகள்.

அதுகுறித்த ஒரு பார்வை...

அட்டகாசமான இன்டீரியர்

அட்டகாசமான இன்டீரியர்

அனுபூதி பெட்டிகளின் உட்புறம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சிகரமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் உட்புறத்தை வடிவமைத்துள்ளனர்.

டெல்லியில் பெட்டி தயாரிப்பு

டெல்லியில் பெட்டி தயாரிப்பு

டெல்லியில் உள்ள ரயில்வே கோச் பராமரிப்பு மையத்தில் தான் இந்தப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சதாப்தி ரயில்களில் இணைக்கப்படவுள்ளன.

சதாப்தியிலும், ராஜ்தானியிலும்

சதாப்தியிலும், ராஜ்தானியிலும்

இந்த நவீன அழகிய பெட்டிகள் முதலில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இணைக்கப்படும். பின்னர் ராஜ்தானி எக்ஸ்பிரஸிலும் இணைக்கப்படும்.

கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகமாகும்

கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகமாகும்

வழக்கமான சதாப்தி ரயில்களின் முதல் வகுப்பு ஏசி எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்யும்போது செலுத்தும் கட்டணத்தை விட புதிய அனுபூதி பெட்டிகளில் அதாவது சிறப்பு ஏசி சொகுசு வகுப்பில் பயணம் செய்ய கூடுதலாக ஒன்றரை மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் பயணிகள்.

முதலில் ஒரு ரயிலில்

முதலில் ஒரு ரயிலில்

சோதனை முயற்சியாக முதலில் ஒரே ஒரு சதாப்தி ரயிலில் இந்த அனுபூதி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன என்று ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மீதமுள்ள 16 சதாப்தி ரயில்களிலும் இப்பெட்டிகள் இணைக்கப்படுமாம்.

50 குஷன் இருக்கைகள்

50 குஷன் இருக்கைகள்

வழக்கமான சதாப்தி ரயில்களில், ஒரு பெட்டியில் 56 இருக்கைகள் இருக்கும். ஆனால் அனுபூதி பெட்டிகளில் 50 இருக்கைகள் இருக்கும். அனைத்தும் சொகுசான குஷன் இருக்கைகள்.

எல்சிடி டிவி

எல்சிடி டிவி

இப்பெட்டிகளில் லக்கேஜ்களை வைக்க மேலே வசதி செய்யப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கான டேபிளும் இருக்கைகளுக்கு முன்புறம் இணைக்கப்பட்டுள்ளது. டிவி பார்ப்பதற்கு வசதியாக எல்சிடியும் பொருத்தப்பட்டுள்ளது.

தானாக திறந்து தானாக மூடும் கதவுகள்

தானாக திறந்து தானாக மூடும் கதவுகள்

இந்தப் பெட்டிகளில் தானாக திறந்து மூடும் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கதவு மீது கை வைக்கும் வேலைக்கே இடமில்லை. மாடுலார் டாய்லெட்டுகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அழகிய திரைச்சீலைகளும் பெட்டிக்குப் புதிய வசீகரத்தை சேர்க்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An inside view of modern coach 'Anubhuti' with good ambience at a railway coach care centre, in New Delhi on Thursday. The coach, to be introduced soon, will provide higher travel comforts to passengers. Railways has proposed to introduce a modern coach 'Anubhuti' with good ambience in Shatabdi and Rajdhani trains phase-wise, providing higher travel comfort to passengers.
Please Wait while comments are loading...