For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த 3 திமுக அமைச்சர்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: திமுக மத்திய இணையமைச்சர்களான பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.

இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து நேற்று திமுக விலகியது. இதையடுத்து டி.ஆர்.பாலு தலைமையில் 5 திமுக அமைச்சர்கள் கொண்ட குழு நேற்று இரவு 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து லோக்சபாவில் உள்ள 18 திமுக எம்பிக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடித்தத்தை அளித்தனர்.

இதையடுத்து இன்று காலை இணை அமைச்சர்களான பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

DMK Ministers
ஆனால் கேபினட் அமைச்சரான முக அழகிரி மற்றும் நெப்போலியன் ஆகியோர் மட்டும் தனியாகச் சென்று ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

English summary
DMK ministers Palani Manickam, Jagathratchagan and Gandhi Selvan have submitted their resignation letters to PM Manmohan Singh today. Cabinet minister MK Azhagiri and Napoleon are yet to resign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X