For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவோடு இரவாக பிரணாப்பிடம் ஆதரவு வாபஸ் கடிதம் தந்த திமுக எம்.பி.க்கள்

By Siva
Google Oneindia Tamil News

T R Baalu
டெல்லி: மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து டி.ஆர். பாலு தலைமையில் 5 பேர் கொண்ட திமுக எம்.பி.க்கள் குழு ஜனாதிபதியை நேற்று இரவு சந்தித்து ஆதரவு வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை அளித்தனர்.

இலங்கை விவகாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மெத்தனமாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்து வந்தார். இந்நிலையில் மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து டி.ஆர். பாலு தலைமையில் 5 பேர் கொண்ட திமுக எம்.பி.க்கள் குழு நேற்று இரவு 10.30 மணிக்கு ராஷ்ட்ரபதி பவன் சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு லோக்சபாவில் உள்ள 18 திமுக எம்.பி.க்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறி அதற்கான கடிதத்தை பிரணாபிடம் அவர்கள் அளித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர். பாலு கூறுகையில்,

இலங்கைக்கு எதிரான வரைவு தீர்மானத்தை பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கட்சி முடிவு செய்யும் என்றார்.

இதையடுத்து திமுக எம்.பி.க்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளிக்கவிருக்கின்றனர்.

English summary
DMK on Tuesday night withdrew its support to the UPA over the Sri Lankan Tamils issue and ruled out any reconsideration, a move that makes the government vulnerable despite its assertions of having a parliamentary majority. A five-member DMK delegation headed by T R Baalu handed over a letter by party supremo M Karunanidhi to President Pranab Mukherjee at 10.30pm at Rashtrapati Bhavan withdrawing support of its 18 Lok Sabha MPs to the UPA government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X