ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெ. தலைமையில் போராட்டம்: இது தா.பாண்டியனின் கோரிக்கை

நிருபர்களிடம் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் உள்ள அகதி முகாம்களை மூடிவிட்டு அங்குள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும், அவர்களின் மறுவாழ்வுக்கான நலத்திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இலங்கை தமிழர்களுக்காக அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருவது வரவேற்கத்தக்கது. சமுதாய அக்கறையுடன் போராடும் உணர்வு மாணவர்களிடம் இன்னமும் இருப்பது மகிழ்ச்சி. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் மாணவர்கள் அமைதியாகப் போராட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும்.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது என்று திமுக எடுத்துள்ள முடிவு ஆறுதல் அளிக்கிறது. காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்துக்கு இது வலுசேர்க்கும் என்பதால், இதை வரவேற்கிறோம். ஒருவேளை கருணாநிதியின் இந்த முடிவு நாடகமாக இருந்தால் அது விரைவில் அம்பலமாகிவிடும்.
தமிழகத்துக்கு சுற்றுலா வரும் இலங்கை நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்திய அரசு வலுவான திருத்தங்களை கொண்டு வந்தால் அதனை ஆதரிக்க பெரும்பான்மையான நாடுகள் தயாராக இருக்கின்றன. இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நாடான இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக இருப்பதால்தான் பல நாடுகள் அந்நாட்டுக்கு ஆதரவளிக்கின்றன.
எனவே, மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வலுவான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் போராட்டம் நடைபெற வேண்டும் என்றார் தா. பாண்டியன்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications