For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியாவில் தொடரும் சம்பள பிரச்சினை: விமானிகள் கூட்டமைப்பு இன்று ஆலோசனை

Google Oneindia Tamil News

Air India may face fresh trouble over salaries
டெல்லி: தாமதமாக வழங்கப்படும் ஊதியத்தினாலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஊதிய உயர்வைக் குறைக்கலாம் என்ற ஐயப்பாடும், விமானிகளிடம் எழுந்ததை அடுத்து இன்று வர்த்தக விமானிகள் கூட்டமைப்பு ஒன்றுகூடி இதுகுறித்து விவாதிக்க உள்ளது

இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே பங்குகளின் சரிவு, லாபத்தில் தொய்வு, அதிகரித்து வரும் ஊழியர்கள் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள தர்மாதிகாரி கமிஷன், விமானிகளின் ஊதிய உயர்வுகளைக் குறைத்து அறிக்கை வெளியிடக்கூடும் என்ற நிலையில் புதிய பிரச்சினை ஒன்றும் உருவாகியுள்ளது.

தொடர்ந்து . சென்ற மாதம் அடிப்படை ஊதியமே வழங்கப்பட்டது என்றும், அதில் 80 சதவீத பயணச் சலுகைகள் தரப்படவில்லை என்றும் விமானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தாங்கள் இந்தத் தொடர் சம்பளப் பிரச்சினைகளால் மிகவும் வெறுப்படைந்து இருப்பதாக சங்க உறுப்பினர் ஒருவர் கூறினார். ஏற்கனவே குறைவான சம்பளம் பெறும் தாங்கள், கமிஷன் பரிந்துரைக்கும் அதிகப்படியான பிடித்தங்களை ஏற்க இயலாது என்றும் விமானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இயங்கும் மற்ற வர்த்தக விமானங்கள் மற்றும் வளைகுடா விமான நிறுவனங்களின் ஊதிய விபரங்களை அவர்கள் ஒப்பிட்டு பார்த்து, அதே போன்ற பலன்களை மாற்றங்களை கண்டுள்ள ஏர் இந்திய நிறுவனமும், அவர்களுடைய ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
Air India may be headed for a fresh round of staff trouble. Constant delay in salary payment and the uncertainty surrounding pay cut following the implementation of Dharamadhikari committee report has forced the pilots of erstwhile Indian Airlines to call an emergency meeting of their union on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X