For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொத்த போலீஸ் 15,85,117 .. அதில் பெண் போலீஸ் வெறும் 5.33 % தான்...!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 15 லட்சத்து 85 ஆயிரத்து 117 போலீஸார் உள்ளனர். ஆனால் அதில் பெண் போலீஸாரின் எண்ணிக்கை என்று பார்த்தால் வெறும் 84,479 பேர்தான் உள்ளனராம். அதாவது மொத்த போலீஸாரில் பெண்போலீஸாரின் எண்ணிக்கை 5.33 சதவீதம்தான்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிரித்து வரும் நிலையில் பெண் போலீஸாரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக புள்ளிவிவரத் தகவல் கூறுவதாவது...

நாடு முழுவதும் 15.85 லட்சம் போலீஸார்

நாடு முழுவதும் 15.85 லட்சம் போலீஸார்

நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சத்து 85 ஆயிரத்து 117 போலீஸார் உள்ளனர்.

பெண்கள் வெறும் 84,479 பேர்தான்

பெண்கள் வெறும் 84,479 பேர்தான்

இதில் பெண் போலீஸாரின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது 84,479 பேர் மட்டுமே. அதாவது 5.33 சதவீதம்தான்.

போலீஸ் நிலையங்கள் 15,000

போலீஸ் நிலையங்கள் 15,000

நாடு முழுவதும் மொத்தம் 15,000 காவல் நிலையங்களுக்கும் மேல் உள்ளன.

அனைத்து மகளிர் காவல் நிலையம் 499தான்

அனைத்து மகளிர் காவல் நிலையம் 499தான்

முற்றிலும் மகளிர் காவலர்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் நாட்டில் 499 மட்டுமே உள்ளனவாம்.

2011ல் 2,28,650 குற்றச் செயல்கள்

2011ல் 2,28,650 குற்றச் செயல்கள்

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. 2011ல் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 650 ஆக இருந்தது.

24,206 பலாத்கார வழக்குகள்

24,206 பலாத்கார வழக்குகள்

இந்த வழக்குகளில் 24,206 வழக்குகள் பாலியல் பலாத்கார வழக்குகள் ஆகும்.

பெண்களை மதிக்கும் தமிழ்நாடு

பெண்களை மதிக்கும் தமிழ்நாடு

பெண் காவலர்களின் நிலையை மாநில வாரியாக பார்க்கும்போது தமிழ்நாடு பெட்டராக உள்ளது. பிற மாநிலங்களைப் போல இல்லாமல், இங்கு அதிக அளவிலான பெண் போலீஸார் உள்ளனர்.

தமிழகத்தில் 10.57 சதவீதம் பெண் போலீஸ்

தமிழகத்தில் 10.57 சதவீதம் பெண் போலீஸ்

தமிழகத்தில் மொத்தம் 95 ஆயிரத்து 745 போலீஸார் உள்ளனர். இதில் பெண் போலீஸாரின் எண்ணிக்கை 10,118 ஆகும். அதாவது 10.57 சதவீதம்.

டெல்லி நிலையைப் பாருங்க

டெல்லி நிலையைப் பாருங்க

டெல்லியில் மொத்தம் உள்ள 75 ஆயிரத்து 169 போலீஸாரில் பெண்களின் எண்ணிக்கை 5356 ஆகும். அதாவது 7.13 சதவீதமாகும்.

English summary
The country has just 5.33 per cent women in police forces despite growing demands for more representation in law enforcement agencies. According to Home Ministry statistics, out of 15,85,117 personnel working in state police forces, only 84,479 or just 5.33 per cent are women. Besides, there are just 499 all-women police stations in the country out of a total 15,000 stations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X