For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளியில் பறந்தால் பெருங்குடல் கேன்சர் வருமா?

Google Oneindia Tamil News

Space travel may up colon cancer risk'
வாஷிங்டன்: விண்வெளியில் பறக்கும் வீரர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனராம்.

இது குறித்து ஜியார்ஜ்டவுண் லொம்பார்டி கேன்சர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், அண்டக் கதிர்வீச்சின் தாக்கம், எலியின் குடல் பகுதியில் ஆன்கோஜெனிக் புரதங்களை அழித்து விடுவதாக தெரியவந்துள்ளது. அதுபடிப்படியாக பெருங்குடல் புற்றுநோயாக மாற சாத்தியமுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு நாசாவின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டது குறிப்பிடத்த்க்கது. ஏனெனில் நாசா விண்வெளி வீரர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை புற்றுநோயிலிருந்து காக்க பெரும் முயற்சிகள் எடுத்து வருவதாக விஞ்ஞானி சுபாங்கர் சுபன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேராசிரியர் தத்தா இதுகுறித்து கூறும்பொழுது, ‘ நாங்கள் விண்வெளி பயணம் மேற்கொண்டால் கட்டாயம் புற்றுநோய் வரும் என்று கூறவில்லை. ஆனால் அதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் உள்ளன என கண்டறிந்துள்ளோம்' என்று விளக்கமளித்துள்ளார்.

English summary
Space travel may increase the risk of colon cancer, a new study led by Indian-origin scientists has warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X