For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யை அரசு ஏற்று நடத்த முடிவு: சட்டசபையில் மசோதா தாக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

Bill introduced to take over Annamalai University
சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

வரலாற்று பெருமை வாய்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து கடந்த ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையிண்றி மூடப்பட்டது. மேலும் இருப்பினும் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை கவனிக்க அரசு சார்பில் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். மேலும் பல்கலைக் கழகத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பாக ஆராய்ந்த சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அதன் துணைவேந்தர் ராமநாதன் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதனால் பல்கலைக் கழகத்திற்கு அரசு அளிக்கும் சிறப்பு அதிகாரங்கள் இனி வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது.

English summary
A Bill was introduced in Tamilnadu Assembley to Govt. take over the Chidambaram Annamalai University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X