For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

35,000 உயிர்கள் வீழ்ந்தும்... இன்னும் வீழாமல் உயிர்களைக் காவு வாங்கி வரும் மெக்சிகோ போதை ராஜ்ஜியம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: இதுவரை 35,000 மெக்சிகோ குடிமக்கள் உயிரிழந்து விட்டனர். இருந்தும் இன்னும் மெக்சிகோவின் போதை ராஜ்ஜியம் சற்றும் வீழவில்லை.மாறாக தொடர்ந்து வீரியத்துடன் பல ஆயிரம் உயிர்களை கேள்விக்குறியாக்கி விஸ்வரூபம் எடுத்துது நிற்கிறது.

மெக்சிகோ என்றால் அமெரிக்கர்கள் டென்ஷனாகி விடுவார்கள். காரணம், இவர்களால் அவர்களுக்குப் பல தலைவலிகள் ஏற்படுவதுதான். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுறுபவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் மெக்சிகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமை, குற்றச் செயல்களில் அதிகரிப்பு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என மெக்சிகோவில் இல்லாத சட்டவிரோத செயல்களே இல்லை. அப்படி ஒருநாடு அது. காரணம், அந்த நாட்டை ஆட்டிப்படைத்து வரும் போதை சாம்ராஜ்ஜியம்.

என்ன இல்லை இந்த திருநாட்டில்

என்ன இல்லை இந்த திருநாட்டில்

என்ன வகையான போதை விஷயங்கள் உலகத்தில் இருக்கிறதோ, அவற்றை ஒட்டுமொத்தமாக இந்த நாட்டில் காணலாம். போதைப் பொருட்களின் தலைநகர் போல திகழ்கிறது மெக்சிகோ.

தொடாதே சுட்டுப்புடுவேன்

தொடாதே சுட்டுப்புடுவேன்

இந்த நாட்டில் தடுக்க விழுந்தால் ஏதாவது ஒரு டிரக் கும்பல் மீதுதான் விழ வேண்டும். அப்படி ஒரு போதை நாடு. எங்கு பார்த்தாலும் சட்டவிரோத போதைப் பொருள் கும்பல்கள்தான்.

முட்டை ரவி மாதிரி நிறையப் பேர்

முட்டை ரவி மாதிரி நிறையப் பேர்

நம் ஊரில் முட்டை ரவி, பான் பராக் ரவி, ஸ்டீல் ரவி என விதம் விதமாக ரவுடிகள் இருப்பது போல மெக்சிகோவிலும் ஏகப்பட்ட போதை பார்ட்டிகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகளும் வெடிக்கும். தெருவில் நின்று டுமீல் டுமீல் என்று சுட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள். நிறையப் பேர் சாவார்கள்.

இதுவரை 35,000 பேர் அவுட்

இதுவரை 35,000 பேர் அவுட்

இந்த சண்டைகளில் சிக்கி இதுவரை 35,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் சண்டை நின்றபாடில்லை. டென்ஷனும் குறைந்தபாடில்லை. உலகின் மிகவும் மோசமான சட்டம் ஒழுங்குடன் கூடிய நாடாக மெக்சிகோ மாறி பல காலமாகி விட்டது.

திகில் உலகின் திரில் படங்கள்

திகில் உலகின் திரில் படங்கள்

இப்படிப்பட்ட திகில் பூமியின் சில திரில்லான காட்சிகளை புகைப்படமாக்கியுள்ளார் பிரபல புகைப்படக்காரர் டேவிட் ரோச்கைண்ட். அதை ‘Heavy Hand, Sunken Spirit.' என்ற பெயரில் புத்தமாகவும் வெளியிட்டுள்ளார்.

போதை உலகின் பயங்கர முகம்

போதை உலகின் பயங்கர முகம்

போதை உலகின் பயங்கர முகத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படங்கள் உள்ளன. மெக்சிகோவின் இருள் முகத்தையும் இவை வெளிக்காட்டுகின்றன.

போதை அடிமைகள், பரிதாப கைதிகள்...

போதை அடிமைகள், பரிதாப கைதிகள்...

இவரது புகைப்படங்களில் போதைக்கு அடிமையானவர்கள், தாதா கும்பலைச் சேர்ந்த முரட்டு அடியாட்கள், பரிதாபத்துக்குரிய கைதிகள் உள்பட பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களை படமாக்கியுள்ளார்.

பார்க்கவே திகிலாக இருக்கும் இந்தப் படங்கள் மெக்சிகோவின் இதுவரை அறியப்படாத பல விஷயங்களை நமக்கு காட்டுகிறது.

English summary
It is a place at once thought of for its destitution, crime, and poverty – where a bitter conflict has claimed the lives of more than 35,000 Mexicans. Photographer David Rochkind captures Mexico’s seedy drug trade in a brutally humanistic light in a series of images collected in his book, ‘Heavy Hand, Sunken Spirit.’
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X