For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தொடையில் ஸ்டிக்கர் ஒட்டி' கல்லா கட்டும் ஜப்பானியர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சுவரில் விளம்பரம் செய்யலாம், உடைகளில் விளம்பரம் செய்யலாம், ஆனால் தொடையில் விளம்பரம் செய்யலாம் என்று கண்டு பிடித்து கல்லா கட்டி வருகின்றனர் ஜப்பானியர்கள். எதில் எதில்தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்று விவஸ்தை இல்லாமல் இந்த புதுவித விளம்பர இடத்தை கண்டுபிடித்துள்ளனர் ஜப்பானியர்கள்.

கிரிக்கெட் வீரர்களைப் பார்த்தாலே காமெடியாக இருக்கும். காரணம் அவர்கள் அணிந்திருக்கும் தொப்பி, டிரஸ்ஸில்.. எங்கு பார்த்தாலும் விளம்பர மயமாக இருக்கும். காசுக்குத்தான் என்றாலும் உடம்பு முழுக்க திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரமாக போட்டுத் தாளித்திருப்பார்கள். இதற்கான பைன் கட்டிய கிரிக்கெட் வீரர்கள் கூட உண்டு. நம்முடைய கதை அதைப்பற்றியதல்ல.

இந்த வகையில் ஜப்பானில் தற்போது நூதனமான முறையில் தொடையில் விளம்பரம் செய்து பெண்களை விளம்பர போர்டுகளாக்கி வருகின்றனர். இதற்கும் அங்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

தொடையைக் காட்டு ஸ்டிக்கரை ஒட்டு

தொடையைக் காட்டு ஸ்டிக்கரை ஒட்டு

ஜப்பானைச் சேர்ந்த அந்த விளம்பர நிறுவனமானது ஸ்டிக்கர் வடிவிலான விளம்பரங்களை பெண்களின் தொடைகளில் ஒட்டுகிறது. இதற்கு வாடகையாக நல்ல பணமும் அந்தப் பெண்களுக்குத் தரப்படுகிறது.

குட்டைப் பாவாடைதான் போட வேண்டும்

குட்டைப் பாவாடைதான் போட வேண்டும்

விட் ஐஎன்சி என்ற அந்த நிறுவனத்தின் இந்த ஸ்டிக்கர் விளம்பரங்களை ஒட்டிக் கொள்வதற்கு நல்ல பணம் கிடைக்கிறது என்பதால் பெண்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி விளம்பரங்களை ஒட்டிக் கொள்வோர் குட்டைப் பாவாடையைத்தான் கண்டிப்பாக போட வேண்டும்.

18 வயசுக்கு மேல் ஆகணும்...

18 வயசுக்கு மேல் ஆகணும்...

ஆனால் இந்த விளம்பரங்களை ஒட்டிக் கொள்வதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அதாவது அப்பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். அப்பெண்களுக்கு டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் நிறைய நண்பர்கள், பின்பற்றுபவர்கள் இருக்க வேண்டும்.அதிகம் பேரிடம் பழகும் தன்மை கொண்டவராக அவர் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பின்னணி உடையவர்களுக்குத்தான் இந்த ஸ்டிக்கர் விளம்பரம் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

ஆண்களுக்கும் வாய்ப்பு தருவோமுங்க

ஆண்களுக்கும் வாய்ப்பு தருவோமுங்க

பெண்களைப் போலவே தற்போது ஆண்களுக்கும் கூட இந்த விளம்பர வாய்ப்பை அந்த நிறுவனம் வழங்கவுள்ளதாம்.

ஒரு நாளைக்கு 121 டாலர்

ஒரு நாளைக்கு 121 டாலர்

ஸ்டிக்கர் விளம்பரத்திற்குத் தேர்வாகும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 121 டாலர் கட்டணமாக தரப்படுகிறதாம்.

படம் எடுத்து பேஸ்புக்கில் போட வேண்டும்

படம் எடுத்து பேஸ்புக்கில் போட வேண்டும்

ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்ட பின்னர் அதை புகைப்படம் எடுத்து டிவிட்டர், பேஸ்புக்கில் அந்தப் பெண்கள் போட வேண்டுமாம். மேலும் அக்கம்பக்கத்தினர் அதிகம் பார்க்கும் வகையில் நடமாடியபடி இருக்க வேண்டுமாம்.

நம் ஊரிலும் அந்த ட்ரெண்ட் வருமோ?

நம் ஊரிலும் அந்த ட்ரெண்ட் வருமோ?

நம் ஊரில் வீட்டுச் சுவர்களை விளம்பரத்திற்காக வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஜப்பானில் தொடையை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த கலாச்சாரம் நம் ஊரில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

English summary
Where does it end? Other than at the hem of one’s skirt, of course.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X