For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடற்பயிற்சி, ஸ்பா சிகிச்சைகள் மூலம் அல்கொய்தாவை மிதவாதிகளாக்கும் சவூதியின் புதிய திட்டம்

Google Oneindia Tamil News

ரியாத்: சவூதி அரேபிய சிறைகளில் இருக்கும் தீவிரவாதிகளான அல்கொய்தா போராளிகளுக்காக, அந்நாட்டின் அரசு, ஆடம்பரமான மறுவாழ்வு மையத்தை நிறுவியுள்ளது.

அல்கொய்தா போராளிகளுடன் கலந்தாய்வு செய்வதன் மூலமும், அதிக உடற்பயிற்சிகள் மூலமும், ஸ்பா சிகிச்சைகள் மூலமும், தீவிர மதவாதிகளான இப்போராளிகளை மிதவாதிகளாக மாற்றமுடியும் என சவூதி அரசு நம்புகின்றது.

இத்திட்டத்தை ஏழு வருடங்களுக்கு முன்னால், சவுதியில் ஏற்பட்ட பிரச்சினையில், கைது செய்யப்பட்ட உள்நாட்டு அல்கொய்தா தீவிரவாதிகளைத் திருத்துவதற்காக, சவூதி இளவரசர் முகமது பின் நயெப் உருவாக்கினார்

தீவிரவாதிகளை திருத்த...

கலந்தாய்வுகள் மற்றும் மதத்தினைப் பற்றிய பிரசங்கங்களுக்கு நடுவே, இப்போராளிகள், அந்த மையத்தில் உள்ள மிகப்பெரிய நீச்சல் குளம், நீராவிக்குளியல், உடற்பயிற்சி அரங்கம், தொலைகாட்சி அரங்கம் ஆகியவற்றில் தங்கள் பொழுதைக் கழிக்கலாம்.

கொஞ்சம் பேர் போதும்...

இதனைப் பார்வையிட்ட, உள்துறை அமைச்சரின் தகவல் அதிகாரி, 3000-க்கும் குறைவானவர்களையே, விடுதலை செய்யப்படுவதற்கு முன்பு இங்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆடம்பரமானது...

இது போன்ற மறுவாழ்வு மையம் ஒன்று, ஏற்கனவே துறைமுக நகரமான ஜெட்டாவில் இயங்கி வருகின்றது. ஆயினும், ரியாத்தில் அமைந்துள்ள இந்த மையமே, தீவிரவாதிகள், மிதவாதிகளாக மாறுவதற்காக ஆடம்பர வசதிகளை உள்ளடக்கி உள்ளது.

வரப்போகுது இன்னும் 3...

இதுபோல் மேலும் மூன்று மையங்களை நாட்டின் மற்ற பகுதிகளிலும் திறக்க இளவரசர் திட்டமிட்டுள்ளார்.

English summary
Saudi Arabia is hoping to wean jailed Al-Qaeda militants off religious extremism with counselling, spa treatments and plenty of exercise at a luxury rehabilitation centre in Riyadh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X